நம்ம ஊரு சமையலைப் பண்பாட்டுச் சமையல் என்றே சொல்லலாம்.
பண்பாடென்பது பாடறிந்து ஒழுகல் என்கிறது கலித்தொகை. நம் முன்னோர் சமைத்த உணவு வகைகளை இந்தத் தலைமுறைக்கும் கொண்டு வந்து சேர்ப்பதே உணவுப் பண்பாடு.
அந்த வகையில் பாரம்பரியம் மிக்க தாமிரபரணியும் வைகையும் பாய்ந்து வாழ்வித்த தமிழகத்தின் தென்கோடி என்பது, மொழிக்கு மட்டுமல்ல, நாகரிகத்திற்கு மட்டுமல்ல, தமிழனின் பழமையை எடுத்துச் சொல்லும் அடையாளங்கள் பலவற்றைத் தாங்கி நிற்கும் பகுதி என்றே பெருமையோடு சொல்லலாம்.
நம் ஊரிலே நடக்கின்ற பல பண்டிகை நாட்களில், நாம் சமைக்கின்ற உணவு வகைகளை வலைப்பூவிலே பகிர்ந்து கொள்ள நினைத்ததன் வெளிப்பாடே இப்பதிவு.
இன்று சித்திரை முதல் நாள். நம்மூரிலே சித்திரை விசு என்றும் வருசப் பிறப்பு என்றும் விசேஷமாகக் கொண்டாடும் தினம்.
இந்த நாளில் பொதுவாக அவல் நனைப்பது என்ற பழக்கம் உண்டு. அதற்காக, வீட்டிலே திருமணம் முடிந்த பெண்களுக்குத் தாய் வீட்டிலிருந்து சீர் வரிசையாக, ஓலைப்பெட்டியில் 11 படி, 21 படி என்று அவரவர் தகுதிக்கு ஏற்ப அவலும், வெல்லமும் கொடுப்பதுண்டு.இதனைச் சித்திரை சீர் என்று சொல்வார்கள்.
ஏன் அவலைக் கொடுக்கிறார்கள் என்று எனக்கு நெடுநாளைய வினா!
காரணமின்றி எதுவும் நம்மவர்கள் செய்வதில்லையே!
திருநெல்வேலி , குமரி மாவட்டங்களை ஒட்டி கேரளா அமைந்துள்ளதால் , மலையாள மக்களின் பண்பாட்டுப் பதிவுகளும் நம் மக்களோடு கலந்துள்ளது. நம் ஊர் சமையலிலே தேங்காய் இல்லாமல் சமைப்பது கிடையாது. இதுவும் ஒரு வகையில் அவர்களின் சமையலின் சாயலே.இல்லை நம் முன் தமிழ் மக்களின் சமையலாகக்கூட இருக்கலாம். அது அவர்களிடம் இருக்கலாம். பல நல்ல தமிழ்ச்சொற்களை மலையாள மக்கள் பயன்படுத்துவதைப் பார்த்து நானே வியந்திருக்கிறேன்.
சரி, விஷயத்திற்கு வருகிறேன்….
அவல் என்பது கிருஷ்ணருக்குப் பிடித்த உணவு. சித்திரை விசு வழிபாட்டில் மலையாளத்தில் கிருஷ்ணரே முக்கிய இடம்பெறுகிறார் என்பதால் கேரளத்தை ஒட்டிய மாவட்டங்களாகிய நெல்லை குமரி மாவட்டங்களிலும் அவலைப் படைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.
சித்திரை விசுவிற்குப் படைக்கப்படும் அவலினை எப்படிச் செய்வது?
அவல் -1 டம்ளர்
வெல்லம்- ½ டம்ளர்
ஏலக்காய்-3
தேங்காய் துருவல் -½ மூடி
பொரி கடலை-1/4 டம்ளர்(பொட்டுக்கடலை, உடைத்த கடலை)
எள்- 2 ஸ்பூன்
முந்திரிப்பருப்பு -10
நெய்- 3 ஸ்பூன்
முதலில் அவலினை ஊறவைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் இட்டு சிறிது தண்ணீர் தெ்ளித்துப் பாகு பதத்திற்குக் காய்ச்சவும்.
அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து, அதில் நெய் ஊற்றி , ஏலக்காய், முந்திரிப்பருப்பு, எள், பொட்டுக்கடலை அனைத்தையும் இட்டு இலேசாக வதக்கிவிட்டு ஊற வைத்திருந்த அவலையும் அதில்போட்டு கிளறிவிடவும். தேங்காய்த் துருவலை நெய்யில் வதக்கிக் கொள்ளவும் வதக்கியத் தேங்காய்த் துருவலை கிளறி வைத்திருக்கும் அவலோடு சேர்க்கவும்.
சுவையான இனிப்பு அவல் தயார்.
பாரம்பரிய நம் பண்பாட்டு உணவு!
நாவிலும் வாழ்விலும் இனிமை சேர புத்தாண்டு வாழ்த்துக்கள்!